ஆட்டம் தொடங்குகிறது
அரசனை காக்க
அவரவர்க்குரிய பலத்துடன்!
ஆடுகிறாள் ராணி
அசுர பலத்துடன்
தாக்குதல்களும், தாக்குதலுக்குள்ளாதலுமாய்
அனைவரும், அரசனைத் தவிர
இறுதியில்
ஆட்டத்தின் வெற்றி அரசனுக்குரியதாகிறது
விளையாட்டிலும் கூட
உழைப்பவர்களின் வெற்றி
அவர்களுக்கானதாய் இல்லை
ஒரு போதும்.
4 கருத்துகள்:
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை. உன்னுடைய வலைப்பதிவில் இருக்கிற நான்கு கவிதைகளும் நன்றாக வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுது.
Super. வெற்றி என்பது என்ன என்பதை பொருத்தது. மன்னனின் வெற்றியே தன் வெற்றி என்று நினப்பவனுக்கு அதுவும் கொண்டாட்டமே.
Thank you sujatha.
thanks anna.
கருத்துரையிடுக