செவ்வாய், 29 ஜூன், 2010
முன் மாதிரி
வாழ்க்கையை கற்றுக் கொடுக்க வந்தவள்.
சிறு துளியாய் என்னுள் வீழ்ந்து
பெருமழையாய் எனை ஆட்கொண்டவள்.
காலை கதகதப்பு, மதிய வெப்பம், இரவின் குளிர்ச்சியையும்
ஒருசேர ரசிக்க வைக்கிறாள்.
விளையாடிக் கற்றலின் இன்பத்தை அறிமுகமாக்குகிறாள்.
அபரிதமான கேள்விகளால்
எனதுத் தேடலை அதிகப்படுத்துகிறாள்.
தளரும் தருணங்களில்
தளிர் கரங்களால் தடவி அன்னையாகிறாள்.
சின்ன, சின்ன ரசனைகளை வெளிக்கொணர்கிறாள்.
ரௌத்திரம் பழகலும், குறைத்தலும்
கற்றுக் கொடுக்கிறாள்.
என் சமையலில் நறுமணத்தைக் கூட்டச் செய்கிறாள்.
அன்பின் மூலம் எதிராளியை வசப்படுத்தும்
தந்திரம் சொல்கிறாள்.
பாராட்டலின் பாங்கினை உரைக்கிறாள்.
புன்னகையின் மதிப்பை உணர்த்துகிறாள்.
நட்பும், நேசித்தலும், பகிர்தலுமே
வாழ்க்கை என்று வலியுறுத்துகிறாள்.
யார் சொன்னது?
அம்மாவே மகளின் முன் மாதிரி என்று.
என் மகளே எனது முன்மாதிரி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
நட்பும், நேசித்தலும், பகிர்தலுமே
வாழ்க்கை என்று வலியுறுத்துகிறாள்.
அடடா!
யார் சொன்னது?
அம்மாவே மகளின் முன் மாதிரி என்று.
என் மகளே எனது முன்மாதிரி.
பிரமாதம்!
அம்மாக்களின் வலைப்பூக்களில் சேர்ந்துவிடு ரமா!
பிரமாதம் ரமா...
இது நம் சமுதாயத்துக்கு புதிய கண்ணோட்டம். நாம் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்வதில்லை. ஆனால், அவர்களும் இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடு என்பது நமக்கு புலப்படுவதில்லை.
நன்றி
சோலைக்கண்ணன்
கருத்துரையிடுக