செவ்வாய், 29 ஜூன், 2010

முகம்

முகவரி இல்லா காட்டில் தொலைத்த

முகம் தேடி அலைகின்றேன்!

கடந்து போகின்றன பல முகங்கள்

சிவப்பே சிறந்தது! என்றது ஒரு முகம்

நீலம் உன்னதம் என்றது மற்றொன்று

வெள்ளை என்று சிரித்தது ஒன்று

புறந்தள்ளி நடக்கின்றேன்

நிறமற்ற என் முகம் தேடி.

1 கருத்து:

Solai Kannan சொன்னது…

மிகச்சரியான கருத்து ரமா. நிறமற்றதே, குணமற்றதே, அழுக்கற்றதே, குறையற்றதே ஆன்மாவின் முகவரி. அது தெரிய புரிய பேதங்கள் இல்லாது போகும். அபேதமற்ற நிலையில், கருப்பென்ன, சிவப்பன்ன, நீலமென்ன.

நெற்றியடி...

நன்றி
சோலைக்கண்ணன்