திங்கள், 2 மே, 2011


மின்கம்பியில் வந்தமரும்
சிறு பறவையின் உயிர் துடிப்பு
கரைகிறது நகரத்தின் இரைச்சல்களில்
கருங்காற்றின் வெப்பத்திலுருகும்
புவியை விழுங்கத் துடிக்கிறது
......மலைப் பாம்பை போன்று
சுற்றியிருக்கும் கடல்
அழுத்தங்களுக்கிடையே
மூச்சு திணறும் மரமொன்று
உதிர்க்கிறது தன் கடைசி இலையை
ஆம்/இல்லை என்ற
ஒற்றை நம்பிக்கையில்

1 கருத்து:

rama kannan சொன்னது…

உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்கநன்றி.